ஆப்பிள் புதிய மேக் ப்ரோ முன்பதிவு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் ப்ரோ மற்றும் ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடல்கள் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் முன்பதிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேக் ப்ரோ மற்றும் ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடல்கள் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. அறிவிப்பின் போது இரு சாதனங்களும் குளிர்காலத்தில் விற்பனைக்கு வரும் என அறிவித்து இருந்தது. அதன்படி இவற்றின் முன்பதிவு விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

தற்சமயம் வெளியாகி உள்ள தகவல்களில் மேக் ப்ரோ மற்றும் ப்ரோ டிஸ்ப்ளே XDR சாதனங்களை டிசம்பர் 10 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இவற்றினி விநியோகம் துவங்க சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலையை பொருத்தவரை புதிய மேக் ப்ரோ மாடல் 5999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 4,27,710 என்றும் ப்ரோ டிஸ்ப்ளே XDR விலை 4999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 3,56,413 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. என்ட்ரி லெவல் மேக் ப்ரோ மாடல் 32 ஜிபி வேரியண்ட் 5999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 4,27,710 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.