ரூ. 29, ரூ. 47 சலுகை பலன்களை மாற்றிய பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் சலுகைகளின் பலன்களை அந்நிறுவனம் மாற்றியமைத்து இருக்கிறது. பிஎஸ்என்எல் ரூ. 29 மற்றும் ரூ. 47 சலுகைகளின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சில வட்டாரங்களில் பிஎஸ்என்எல் ரூ. 7, ரூ. 9 மற்றும் ரூ. 192 பிரீபெயிட் சலுகைகளை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஹரியானாவுக்கான பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ. 29 சலுகையின் வேலிடிட்டி ஏழு நாட்களில் இருந்து ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜி.பி. டேட்டா மற்றும் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 47 பிரீபெயிட் சலுகையின் வேலிடிட்டி ஒன்பது நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (தினமும் 250 நிமிடங்கள்), 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

முன்னதாக ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் தங்களின் பிரீபெயிட் சலுகைகளை சமீபத்தில் மாற்றியமைத்தது.