இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மாற்றப்பட்டுள்ளது.

விலை குறைப்பின் படி கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கேல்கஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 8,999 விலையில் வெளியிடப்பட்டது. கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் பியானோ பிளாக் மற்றும் ஸ்டோன் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா தளத்தில் ரூ. 8,499 விலையிலும், ஃப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 9,280 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டிள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது அல்ட்ரா வைடு சென்சார், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் பிரத்யேக டூயல் சிம், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.