பட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சர்வதேச சந்தையில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். வசதி, 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

நோக்கியா 2.3 சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 720×1520 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்

– IMG பவர் வி.ஆர். GE-கிளாஸ் GPU

– 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– டூயல் சிம்

– ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்

– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2

– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4

– 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்

– எஃப்.எம். ரேடியோ

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– மைக்ரோ யு.எஸ்.பி.

– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் சியான் கிரீன், சேண்ட் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 109 யூரோ இந்திய மதிப்பில் ரூ. 8,625 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.