ரூ. 199 முதல் துவங்கும் ஜியோ புதிய விலைப்பட்டியல் – முழு விவரங்கள்

வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வரிசையில் ரிலையன்ஸ் ஜியோவும் தனது சேவை கட்டணங்களை உயர்த்தி உள்ளது. புதிய ஆல் இன் ஒன் பிளான்கள் மாற்றப்பட்ட விலை மற்றும் ஜியோ பிரைம் பலன்களுடன் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை போன்று ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த பின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புக்கான கட்டணம் நிமிடத்திற்கு 6 பைசா என ரிலையன்ஸ் ஜியோ நிர்ணயம் செய்துள்ளது. ஜியோவில் இருந்து ஜியோ எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் தொடர்ந்து இலவசமாக மேற்கொள்ளலாம்.

புதிய ஒருமாத சலுகை (28 நாட்கள் வேலிடிட்டி)

 • ரூ. 199 – தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள்
 • ரூ. 249 – தினமும் 2 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள்
 • ரூ. 349 – தினமும் 3 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள்

புதிய இரண்டு மாத சலுகை (56 நாட்கள் வேலிடிட்டி)

 • ரூ. 399 – தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 2000 ஆஃப்-நெட் நிமிடங்கள்
 • ரூ. 444 – தினமும் 2 ஜி.பி. டேட்டா, 2000 ஆஃப்-நெட் நிமிடங்கள்

புதிய மூன்று மாத சலுகை (84 நாட்கள்)

 • ரூ. 555 – தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 3000 ஆஃப்-நெட் நிமிடங்கள்
 • ரூ. 599 – தினமும் 2 ஜி.பி. டேட்டா, 3000 ஆஃப்-நெட் நிமிடங்கள்

12 மாத சலுகை (365 நாட்கள்வேலிடிட்டி)

 • ரூ. 2199 – தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 12,000 ஆஃப்-நெட் நிமிடங்கள்

குறைந்த விலை சலுகைகள்

 • ரூ. 129 – 2 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள், 28 நாட்கள்
 • ரூ. 329 – 6 ஜி.பி. டேட்டா, 3000 ஆஃப்-நெட் நிமிடங்கள், 84 நாட்கள்
 • ரூ. 1299 – 24 ஜி.பி. டேட்டா, 12,000 ஆஃப்-நெட் நிமிடங்கள், 365 நாட்கள்

சலுகைகளில் ஜியோ பிரைம் பலன்களும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசாவன், ஜியோநியூஸ், ஜியோசெக்யூரிட்டி, ஜியோகிளவுட் மற்றும் ஜியோஹெல்த்ஹப் போன்ற சேவைகளை பயன்படுத்தலாம். புதிய சலுகைகளை வாடிக்கையாளர்கள் டிசம்பர் 6-ம் தேதி முதல் பயன்படுத்தலாம்.