புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. மாடல் வெளியிடப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்தின் அங்கமாக வெளியிடப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி. 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவியை நோக்கியா மற்றும் ஃப்ளிப்கார்ட் இணைந்து வெளியிட்டுள்ளன.

புதிய ஸ்மார்ட் டிவியில் ஹெச்.டி.ஆர். 10 வசதி, MEMC தொழில்நுட்பம், வைடு கலர் கமுட், டால்பி விஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டிவியில் பில்ட் இன் 24 வாட் ஸ்பீக்கர், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS Trusurround), டால்பி ஆடியோ மற்றும் ஆடியோ ஆப்டிமைசேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தில் இயங்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவியில் கூகுளின் ஆண்ட்ராய்டு டிவி பிளே ஸ்டோரை பயன்படுத்தலாம்.

நோக்கியா 55-இன்ச் ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சங்கள்:

– 55-இன்ச் 3840×2160 பிக்சல் டிஸ்ப்ளே

– 1 ஜிகாஹெர்ட்ஸ் பியூர் எக்ஸ் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர்

– மாலி 450MP4 GPU

– 2.25 ஜி.பி. ரேம்

– 16 ஜி.பி. மெமரி.

– ஆண்ட்ராய்டு டி.வி. 9.0

– வைபை, ப்ளூடூத்

– 3x HDMI, 2x USB, ஈத்தர்நெட்

– 24 வாட் ஸ்பீக்கர்

– ஜெ.பி.எல்., டால்பி ஆடியோ, டிடிஎஸ் ட்ரூசரவுண்ட்

நோக்கியா ஸ்மார்ட் டி.வி. விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 10-ம் தேதி துவங்குகிறது.