அடுத்த ஆண்டு அறிமுகமாகும் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்

நோக்கியா மொபைல் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் வழங்கப்படுகிறது.

புதிய நோக்கியா 5ஜி ஸ்மார்டபோன் பியூர்டிஸ்ப்ளே, செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 4K UHD அல்ட்ரா வைடு வீடியோ வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய டீசரின் படி இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

ஆப்டிமைஸ்டு வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகிறது. இது 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போதும் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.