இந்தியாவில் ரூ. 4000 விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் தனது எஸ்1 ஸ்மார்ட்போனினை இந்தியாவி்ல் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டது. மூன்று வேரியண்ட்களில் அறிமுகமான விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது.

விவோ எஸ்1 மட்டுமின்றி விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் இந்தியாவில் ரூ. 28,990 விலையில் வெளியானது. இந்நிலையில் இதன் விலை ரூ. 19,990 என மாற்றப்பட்டுள்ளது.

விலை குறைப்பின் படி விவோ எஸ்1 (4 ஜி.பி. + 128 ஜி.பி.) விலை ரூ. 2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 6 ஜி.பி. + 64 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரூ. 28,990 விலையில் வெளியிடப்பட்ட விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ஏற்கனவே இருமுறை குறைக்கப்பட்டு ரூ. 23,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இதன் விலை ரூ. 4000 குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இவற்றின் விலை ரூ. 19,990 மற்றும் ரூ. 26,990 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.