ரேடியோ வசதியுடன் கூடிய சியோமி பவர் பேங்க் அறிமுகம்

சியோமி நிறுவனம் புதிய பவர் பேங்க் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. புதிய பவர் பேங்க் மின்சாதனங்களை சார்ஜ் செய்வதோடு ரேடியோ போன்றும் இயங்குகிறது. புதிய பவர் பேங்க் சாதனத்தில் சியோமி ரேடியோவை சேர்த்து இருக்கிறது.

இந்த பவர் பேங்க் சாதனங்களை சார்ஜ் செய்வதோடு எஃப்.எம். ரேடியோ போன்றும் இயங்குகிறது. சியோமியின் புதிய பவர் பேங்க்கில் எஃப்.எம். ரேடியோவும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பவர் பேங்க் ஒட்டுமொத்த வடிவமைப்பு பார்க்க ரேடியோ பெட்டி போன்றே காட்சியளிக்கிறது.

சியோமி நிறுவனத்தின் மற்ற பவர் பேங்க் மாடல்களை போன்றே புதிய பவர் பேங்க் சாதனத்திலும் 10,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புதிய 2.1A கரண்ட் கொண்டு சாதனங்களை 5வோல்ட் வரை சார்ஜ் செய்யும் என கூறப்படுகிறது. இதில் உள்ள டிஜிட்டல் டிஸ்ப்ளே பவர் பேங்க்கில் மீதமுள்ள சார்ஜ் திறனை காண்பிக்கிறது.

இதன் மேல்புறத்தில் உள்ள பட்டனை கொண்டு எஃப்.எம். ரேடியோவினை ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம். இதில் யு.எஸ்.பி. 2.0 போர்ட் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த பவர் பேங்க் பிளாக், வைட் மற்றும் பின்க் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இதன் விலை 138 RMB இந்திய மதிப்பில் ரூ. 1,408 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.