நோக்கியா ஸ்மார்ட் டி.வி. இந்திய வெளியீட்டு விவரம்

நோக்கியா மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி. மாடல் இந்தியாவில் டிசம்பர் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய நோக்கியா ஸ்மார்ட் டி.வி. ஃப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இதன் ஆடியோவிற்கு ஜெபிஎல் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இணையத்தில் வெளியான புகைப்படங்களில் நோக்கியா டிவியின் பின்புறம் ஜெபிஎல் பிராண்டிங் கொண்டிருக்கும் என தெரியவந்தது.

முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா ஸ்மார்ட் டிவி 55 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 4K ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது. டிவியின் முன்புறம் நான்கு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது டிவியில் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

ஜெபிஎல் ஸ்பீக்கர்களுடன் புதிய நோக்கியா டிவியில் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட் சவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.