பாப் அப் செல்ஃபி கேமரா கொண்ட முதல் மோட்டோ ஸ்மார்ட்போன்

பாப் அப் ரக செல்ஃபி கேமரா கொண்ட மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் டிசம்பர் 3-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மோட்டோரோலா ஒன் ஹைப்பர் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அந்நிறுவனம் டீசர் மூலம் அறிவித்துள்ளது.

புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. வலைத்தளத்தில் XT2027-1 எனும் மாடல் நம்பருடன் காணப்பட்டது.

இதில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் 6.69 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் என்.எஃப்.சி. வசதி கொண்டிருக்காது என கூறப்பட்டிருந்தது. மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம்.

புகைப்படங்களை எடுக்க பின்புறம் 64 எம்.பி. பிரைமரி சென்சாருடன், 8 எம்.பி. இண்டாவது சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா, F/2.0 லென்ஸ் வழங்கப்படலாம். மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் பிராண்டிங் கொண்டிருக்கும் என்றும் இதில் ஆண்ட்ராய்டு 10 வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் வழங்கப்படலாம்.