பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த ரெட்மி நோட் 8 சீரிஸ்

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 8 மற்றும் நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதுவரை நடைபெற்ற விற்பனைகளில் ரெட்மி நோட் 8 சீரிஸ் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ரெட்மி நோட் 8 சீரிஸ் இந்திய விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை ஒரு மாதத்தில் கடந்துள்ளது.

இது ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்களை உள்ளடக்கியது என சியோமி தெரிவித்துள்ளது. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. + 2 எம்.பி. + 2 எம்.பி. என மொத்தம் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமராவும், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி90டி பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. + 8 எம்.பி. + 2 எம்.பி. + 2 எம்.பி. என நான்கு பிரைமரி கேமராக்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளூ, மூன்லைட் வைட், காஸ்மிக் பர்ப்பிள் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் காமா கிரீன், ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999, டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.