2020 ஐபோன்களில் இத்தனை ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறதா?

ஆப்பிள் நிறுவனம் தனது 2019 ஐபோன்களை வெளியிட்டு சில மாதங்களே நிறைவுற்று இருக்கிறது. இந்நிலையில், 2020 ஐபோன் சீரிஸ் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் வெளியாக துவங்கிவிட்டன.

அதன்படி 2020 ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 12 ப்ரோ சீரிஸ் (ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்) மாடல்களில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. ஐபோன் 12 மாடலில் தற்போதைய ஐபோன் 11 மாடல்களை போன்று 4 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம்.

அதிக ரேம் தவிர ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் பின்புறம் 3D சென்சிங் அம்சம், அதிவேக 5ஜி வசதியை சாத்தியப்படுத்தும் எம்.எம். வேவ் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக குவால்காம் வெளியிட்ட தகவல்களிலும் 2020 ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஃபிளாக்‌ஷிப் மாடல்களை தவிர ஆப்பிள் நிறுவனம் சற்றே குறைந்த விலையில், ஐபோன் எஸ்.இ. 2 மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.