சியோமி 108 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதியானது

சியோமி நிறுவனத்தின் 108 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட Mi நோட் 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டரில் புதிய டீசரை வெளியிட்டுள்ளார். இதே போன்று சியோமி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் டீசர் வெளியாகியுள்ளது.

சியோமி நிறுவனம் தனது Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்.பி. கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் Mi நோட் 10 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

சியோமி Mi நோட் 10 ஸ்மார்ட்போனின்ல் 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 11, 3டி கிளாஸ் பேக், என்.எஃப்.சி., 1சிசி லவுட் ஸ்பீக்கர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 65 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.

புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. சென்சாருடன் 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சாம்சங் SAK2L3 சென்சார், f/2.0, 2x சூம், 8 எம்.பி. 1/3.6-சென்சார், f/2.0, டெலிபோட்டோ லென்ஸ், OIS, 5X ஆப்டிக்கல், 10X ஹைப்ரிட் மற்றும் 50X டிஜிட்டல் சூம், 20 எம்.பி. 1/2.8 இன்ச் சென்சார், f/2.2, 117 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி. f/2.4 அப்ரேச்சர், மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

சீனாவில் சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 28,385) என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 30,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம்.