ஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

ஃபாஸில் நிறுவனம் ஜென் 5 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இதய துடிப்பு சென்சார், அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், அலிமீட்டர் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஃபாஸில் ஜென் 5 சிறப்பம்சங்கள்:

– 1.3 இன்ச் வட்ட வடிவம் கொண்ட AMOLED டிஸ்ப்ளே

– ஸ்னாப்டிராகன் வியர் 3100

– 1 ஜி.பி. ரேம்

– 8 ஜி.பி. மெமரி

– கூகுளின் வியர் ஒ.எஸ்.

– கிரவுன் மற்றும் இரண்டு புஷ் பட்டன்கள்

– நான்கு பேட்டரி மோட்கள்

ஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச்களில் பல்வேறு செயலிகள் ஆட்டோ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மியூசிக் ஸ்டிரீமிங் சேவை, ஸ்பாட்டிஃபை, பீஸ் ஆஃப் மைண்ட், சேஃப்டி ஆப், நூன்லைட் மற்றும் நைக் ரன் கிளப் போன்ற செயலிகள் முதன்மையாக இருக்கின்றன.

ஸ்விம் ப்ரூஃப் ஸ்பீக்கர் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை வழங்குகிறது. இந்தியாவில் ஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ. 22,995 முதல் துவங்குகிறது.