மூன்று பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 10,000 பட்ஜெட்டில் அறிமுகம்

விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் யு20 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 16 எம்.பி. பிரைமரி கேமாரா, f/1.78, 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார், 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ யு20 ஸ்மார்ட்போனில் வளைந்த பிளாஸ்டிக் பேக், கிரேடியன்ட் ஃபினிஷ், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

விவோ யு20 சிறப்பம்சங்கள்:

– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே

– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்

– அட்ரினோ 612 GPU

– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்

– 64 ஜி.பி. UFS 2.1 மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9.1

– டூயல் சிம் ஸ்லாட்

– 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78

– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2

– 2 எம்.பி. 4செ.மீ. மேக்ரோ சென்சார், f/2.4

– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

– கைரேகை சென்சார்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்

– எஃப்.எம். ரேடியோ

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

– மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்

– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ யு20 ஸ்மார்ட்போன் ரேசிங் பிளாக் மற்றும் பிளேஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் விவோ வலைத்தளங்களில் நவம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது.