பட்ஜெட் விலையில் சியோமி Mi பேண்ட் 3ஐ அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் Mi பேண்ட் 3ஐ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய Mi பேண்ட் மாடலில் 0.78 இன்ச் OLED தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 5 ஏ.டி.எம். வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டிருக்கிறது. இதனை அணிந்து கொண்டு தண்ணீரில் 50 மீட்டர் வரை நீச்சல் செய்ய முடியும்.

இதய துடிப்பு சென்சார் இல்லாத Mi பேண்ட் 3ஐ மாடலில் வானிலை விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இத்துடன் ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை நிராகரிக்க பட்டனை அழுத்திப்பிடித்தால் போதும். 110 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட Mi பேண்ட் 3ஐ 20 நாட்கள் ஸ்டான்ட்பை வழங்குகிறது.

சியோமி Mi பேண்ட் 3ஐ சிறப்பம்சங்கள்

– 0.78 இன்ச் OLED 128×80 பிக்சல் தொடுதிரை டிஸ்ப்ளே

– நோட்டிஃபிகேஷன்களை பார்க்கும் வசதி

– உறக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி

– 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டணட்

– 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்

– ப்ளூடூத் 4.2 எல்.இ.

– ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். சாதனங்களுடன் இணையந்து இயங்கும்

– 110 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சியோமி Mi பேண்ட் 3ஐ பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.