இந்தியாவில் நோக்கியா ஸ்மார்டபோனின் விலை குறைப்பு

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் நோக்கியா 2.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து நோக்கியா 2.2 விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலை குறைப்பின் படி நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 3 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 6,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை நோக்கியா இந்தியா ஆன்லைன் தளம், ஃப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் மாற்றப்பட்டுவிட்டது.

இந்தியாவில் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 7,699 விலையிலும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 8699 விலையில் வெளியிடப்பட்டது. கடந்த மாதம் இதன் விலை குறைக்கப்படு ரூ. 6,599 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

நோக்கியா 2.2 சிறப்பம்சங்கள்:

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கிறது.