ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கான கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்

ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கான நிலுவை தொகையை செலுத்த மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளது.

டெலிகாம் நிறுவனங்கள் இரண்டு வகையான கட்டணங்களை மத்திய டெலிபோன் துறைக்கு வழங்க வேண்டும். அதாவது லைசென்சு கட்டணம், அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) கட்டணம் செலுத்த வேண்டும். அந்த நிறுவனங்களின் செல்பாடு அடிப்படையில் இந்த இரு கட்டணங்களும் நிர்ணயிக்கப்படும்.

அந்த வகையில் டெலிகாம் நிறுவனங்கள் நிலைவையில் வைத்திருந்த சுமார் ரூ. 93,000 தொகையை செலுத்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனை செலுத்தும் பட்சத்தில் முன்னணி நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால் தொகையை செலுத்துவதற்கு மத்திய அரசு சலுகைகளை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

அந்த வகையில் இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான நிலுவை தொகையை செலுத்த மத்திய அரசு மார்ச் 2022 வரை கால அவகாசம் அளித்துள்ளது. இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ. 93,000 கோடி வரை செலுத்த வேண்டியிருந்தது.

தற்சமயம் நிலுவை தொகையை செலுத்த கால அவகாசம் கிடைத்திருப்பதால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நெருக்கடி சூழலில் இருந்து மீளும் நிலை ஏர்பட்டுள்ளது.