சாம்சங் W20 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் W20 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய W20 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கிட்டத்தட்ட கேலக்ஸி ஃபோல்டு மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை போன்றே வழங்கப்பட்டுள்ளது. எனினும், புதிய W20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் நடுப்பகுதி சற்று கடினமாகவும், வெள்ளை நிற பேக் கவர் கொண்டிருக்கிறது. இத்துடன் இதன் பேட்டரி அளவிலும் மாற்றம் செய்யப்பட்டு 4235 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் W20 ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனை மடிக்கும் போது 4.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 21:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 ஜி.பி. ரேம், இரட்டை முன்புற கேமரா, முன்புற கவரில் 10 எம்.பி. கேமரா, உள்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் W20 சிறப்பம்சங்கள்:

– 7.3 இன்ச் 2152×1536 பிக்சல் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 டிஸ்ப்ளே

– 4.6 இன்ச் 720×1680 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்

– 675MHz அட்ரினோ 640 GPU

– 12 ஜி.பி. LPDDR4x ரேம்

– 512 ஜி.பி. UFS 3.0 மெமரி

– ஆண்ட்ராய்டு 9.0 பை

– 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.4-f/1.5, OIS

– 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 45° FoV, f/2.4

– 16 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2

– 10 எம்.பி. டூயல் பிக்சல் முன்புற கேமரா, f/1.9

– 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 90° FoV

– 10 எம்.பி. கவர் கேமரா, f/2.2

– ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்

– பக்கவாட்டில் கைரேகை சென்சார்

– 5ஜி Sub6 / mmWave, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

– யு.எஸ்.பி. 3.1

– 4,235 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

சாம்சங் W20 ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவில் டிசம்பர் மாத வாக்கில் துவங்குகிறது. இதன் விலை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படுகிறது.