கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் திரைப்படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை தழுவிய வடிவமைப்பு அம்சங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகள் இடம்பெற்றிருக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் சாதனத்துடன் பிரத்யேக கேஸ், மெட்டல் பேட்ஜ், எஸ் பென் மற்றும் கேலக்ஸி பட்ஸ் வழங்கப்படுகிறது.

இத்துடன் ஸ்டார் வார்ஸ் தீம் கொண்ட வால்பேப்பர்கள், ஷட்-டவுன் அனிமேஷன்கள், ஐகான் மற்றும் சிறப்பு சத்தங்கள் இடம்பெற்றிருக்கிறது. சாம்சங் மற்றும் லுகாஸ்ஃபிலிம் நிறுவனங்களிடையே வியாபார ஒப்பந்த அடிப்படையில் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அமெரிக்காவில் இதன் விலை 1,299.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 93,580) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.