ரூ. 1399 விலையில் லாவா மொபைல் இந்தியாவில் அறிமுகம்

லாவா மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. லாவா ஏ5 என அழைக்கப்படும் புதிய மொபைலில் 2.4 இன்ச் QVGA 240×320 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, டூயல் சிம் ஸ்லாட், வி.ஜி.ஏ. கேமரா, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் யு.எஸ்.பி., ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மல்டிமீடியா பிளேயர், ரெக்கார்டிங் வசதி கொண்ட வயர்லெஸ் எஃப்.எம். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் லாவா ஏ5 மொபைலில் 22 இந்திய மொழிகளுக்கான வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடா, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் இந்தி என ஏழு மொழிகளில் டைப் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

லாவா ஏ5 சிறப்பம்சங்கள்:

– 2.4 இன்ச் QVGA 240×320 பிக்சல் டிஸ்ப்ளே

– டூயல் சிம், GSM+GSM

– வி.ஜி.ஏ. பிரைமரி கேமரா

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– யு.எஸ்.பி., ப்ளூடூத்

– மியூசிக் பிளேயர், வீடியோ பிளேயர்

– ரெக்கார்டிங் வசதி கொண்ட வயர்லெஸ் எஃப்.எம்.

– 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புதிய லாவா ஏ5 மொபைல் போன் புளூ+சில்வர், ரோஸ் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை நாடு முழுக்க ஆஃப்லைன் சந்தையில் நடைபெறுகிறது.