ஏழு மாதங்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஏழு மாதங்கள் (210 நாட்கள்) வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

புதிய சலுகையில் தினசரி டேட்டாவுடன், பிரத்யேக ரிங்பேக் டோன் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. டேட்டா தவிர புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். போன்று எவ்வித பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த சலுகையில் தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 80Kbps ஆக குறைக்கப்பட்டுவிடும்.

முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 997 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

முன்னதாக ரூ. 365 மற்றும் ரூ. 97 சலுகைகளையும் பி.எஸ்.என்.எல். அறிவித்தது. இவற்றில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 399 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 80 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.