வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள்

வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. பெரும்பாலும் செயலியில் புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களின் பீட்டா பதிப்புகளில் வழங்கப்படும். அதன்பின் அம்சங்கள் சோதனைக்கு பின் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது.

தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வாட்ஸ்அப் செயலியில் புதிதாக பிளாக் காண்டாக்ட் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் வாடிக்கையாளர்களுக்கு சாட் விண்டோவில் சிறிய நோட்டீஸ் ஒன்றை காண்பிக்கிறது.

இது வாடிக்கையாளர் குறிப்பிட்ட காண்டாக்ட்டை பிளாக் மற்றும் அன்-பிளாக் செய்த விவரங்களை காண்பிக்கும். இந்த விவரம் காண்டாக்ட்டிற்கு மட்டும் காண்பிக்கப்படும். இதனால் பிளாக் செய்யப்பட்ட வாடிக்கையாளருக்கு அதுபற்றிய விவரம் எதுவும் தெரியாது. இந்த அம்சம் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காண்டாக்ட்டை பிளாக் செய்தது பற்றி தெரிவிக்கும்.

இத்துடன் பிளாக்டு காண்டாக்ட் பகுதியை மேம்படுத்தும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. புதிய அப்டேட்டில் பிளாக் செய்யப்பட்ட காண்டாக்ட்கள் ஒரே குரூப்பில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது பிளாக் செய்யப்பட்ட காண்டாக்ட், பிளாக் செய்யப்பட்ட பிஸ்னஸ்களை தனித்தனியே பிரிக்க வாடிக்கையாளர்களுக்கு வழி செய்கிறது. இந்த அம்சம் தானாக இயங்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் இதனை இயக்க வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு புதிய அம்சங்களும் வெர்ஷன் 2.19.332 பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 2.19.110.17 மற்றும் 2.19.11.119.21 பதிப்புகளில் புதிதாக ஸ்பிலாஷ் ஸ்கிரீனுடன் வழங்கப்படுகிறது. ஸ்பிலாஷ் அம்சம் சாதாரண பயனர் மற்றும் பிஸ்னஸ் அக்கவுண்ட்களுக்கு வழங்கப்படுகிறது.

இவற்றுடன் செட்டிங்ஸ் பகுதியில் ஃபேஸ்புக் பிராண்டிங் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் பல்வேறு யு.ஐ. அம்சங்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் போட்டோ, வீடியோ, டாக்யூமென்ட், கேமரா, ரீட் ரெசிப்ட், டீஃபால்ட் குரூப் அல்லது ப்ரோஃபைல் சிம்பல் போன்றவற்றுக்கு புதிய ஐகான்கள் வழங்கப்படுகிறது.