3டி சென்சிங் வசதியுடன் ஐபோன் எஸ்.இ.2 மற்றும் ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய சாதனங்களை வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஐபோன் எஸ்.இ. 2 மற்றும் அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இரு சாதனங்களும் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய ஐபேட் ப்ரோ பின்புற கேமராவில் 3டி சென்சிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே இதுபோன்ற தகவல்கள் பலமுறை வெளியாகியுள்ளன.

புது சாதனங்களில் 3டி சென்சிங் அம்சத்தை வழங்குவதற்கென ஆப்பிள் ToF (டைம் ஆஃப் ஃபிளைட்) சென்சாரை பயன்படுத்தலாம். தற்சமயம் சந்தையில் விற்பனையாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் மாடல்களில் இந்த சென்சார் வழஙஅகப்படுகிறது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் இரட்டை பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஐபோன் எஸ்.இ. 2 மாடலை பொருத்தவரை இதன் வடிவமைப்பு ஐபோன் 8 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 4.7 இன்ச் டிஸ்ப்ளே, டச் ஐடி, ஆப்பிள் ஏ13 சிப்செட், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.