இந்தியாவில் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் புளூ ஃபெஸ்ட் சேல் சிறப்பு விற்பனையின் கீழ் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆறு நாட்கள் நடைபெறும் சிறப்பு விற்பனை நவம்பர் 19 ஆம் தேதி நிறைவு பெற இருக்கிறது.

விலை குறைப்பு தவிர தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஹெச்.டி.எஃப்.சி. வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் சாம்சங் அக்சஸரீக்களை சிறப்பு விலையில் வாங்கிட முடியும்.

சிறப்பு விலை சாம்சங் வயர்லெஸ் சார்ஜர், கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ், ஸ்டிராப் காம்போக்கள், ஏ.கே.ஜி. வை500 ஹெட்செட், கேலக்ஸி ஃபிரெண்ட்ஸ் கவர், க்ளியர் வியூ கவர் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்5இ போன்ற சாதனங்களுக்கு பொருந்தும்.

சாம்சங் புளூ ஃபெஸ்ட் சேல் சலுகைகள்:

சாம்சங் புளூ ஃபெஸட் சேல் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் நடைபெறுகிறது. அந்த வகையில் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ரூ. 42,999 விலையிலும், கேலக்ஸி எஸ்9 ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஹெச்.டி.எஃப்.சி. வாடிக்கையாளர்களுக்கு 7.5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கேலக்ஸி வாட்ச் வாட்ச் 42 எம்.எம். மாடல் ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.