6.2 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

பானசோனிக் நிறுவனம் இந்தியாவில் எலுகா ரே 810 எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

செல்ஃபி எடுக்க முன்புறம் 16 எம்.பி. கேமரா, ஏ.ஐ. அம்சங்கள்ஸ எல்.இ.டி. ஃபிளாஷ் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதி, பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பானாசோனிக் எலுகா ரே 810 சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1500×720 பிக்சல் ஹெச்.டி. + 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்

– 650 மெகாஹெர்ட்ஸ் IMG PowerVR GE8320 GPU

– 4 ஜி.பி. ரேம்

– 64 ஜி.பி. மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 9.0 பை

– டூயல் சிம்

– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

– கைரேகை சென்சார்

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் டர்கொய்ஸ் புளூ மற்றும் ஸ்டேரி பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.