பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா ஸ்மார்ட்போன் ரூ. 7,999 விலையில் அறிமுகம்

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் எஸ்5 லைட் எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

புதிய இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் செல்ஃபி எடுக்க 16 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த எக்ஸ்.ஒ.எஸ். 5 இயங்குதளம் கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், லோ-லைட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவாட் ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் சிறப்பம்சங்கள்:

– 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்

– மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்

– 4 ஜி.பி. ரேம்

– 64 ஜி.பி. மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– 16 எம்.பி. பிரைமரி கேமரா

– 2 எம்.பி. டெப்த் சென்சார்

– லோ-லைட் சென்சார்

– 16 எம்.பி. செல்ஃபி கேமரா

– ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த எக்ஸ்.ஒ.எஸ். 5

– ஃபேஸ் அன்லாக்

– கைரேகை சென்சார்

– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.