ரூ. 39,990 விலையில் சென்ஹெய்சர் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்

சென்ஹெய்சர் நிறுவனம் புதிதாக IE 80 S BT என்ற பெயரில் ப்ளூடூத் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்போன்கள் ப்ளூடூத் 5 வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் LHDC, aptX HD, AAC, and AKM DAC போன்ற ஸ்டிரீமிங் கோடெக்களை சப்போர்ட் செய்கிறது. இந்தியாவில் இவற்றின் விலை ரூ. 39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்ஹெய்சர் IE 80 S BT இயர்போன் வாடிக்கையாளர்களுக்கு தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மிக எளிமையாக பயன்படுத்தவதற்கென இயர்போனிலேயே டூல் வசதியும், ஸ்மார்ட் கண்ட்ரோல் செயலியும் வழங்கப்பட்டுள்ளது.

நெக்பேண்ட் வடிவமைப்பில் இயர்-ஹூக் டிசைன் கொண்டிருக்கும் IE 80 S BT இயர்போன் வெவ்வேறு அளவுகளில் சிலிகான், லேமெலர் மற்றும் மெமரி ஃபோம் இயர் டிப்களை கொண்டிருக்கிறது. புதிய சென்ஹெய்சர் இயர்போன்களை சார்ஜ் செய்ய யு.எஸ்.பி. டைப்-சி, கேபிள் மற்றும் கேஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இதன் இன்-லைன் ரிமோட் கண்ட்ரோலில் பிரத்யேக பட்டன்கள் சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் அம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரு மைக்ரோபோன்கள் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகின்றன. ப்ளூடூத் நெக்பேண்ட் கழற்றக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால், இதனை கேபிள் கொண்டு வையர்டு ஹெட்செட் போன்றும் பயன்படுத்தலாம்.