ஆறு மாதங்களில் 320 கோடி போலி அக்கவுண்ட்ளை அதிரடியாக நீக்கிய ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 320 கோடிபோலி அக்கவுண்ட்களை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் பயனர்களாக மாறும் போது போலி அக்கவுண்ட்கள் கண்டறியப்பட்டது. இதனால் இவை ஃபேஸ்புக்கின் வாடிக்கையாளர் கணக்கில் சேராது. தற்போதைய நிலவரப்படி ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களில் ஐந்து சதவிகிதம் அதாவது சுமார் 240 கோடி அக்கவுண்ட்கள் போலி என ஃபேஸ்புக் கணித்திருக்கிறது.

இதே காலக்கட்டத்தில் போலி அக்கவுண்ட் தவிர குழந்தைகளின் ஆபாசம் மற்றும் பாலியல் அச்சுறுத்தல் சார்ந்து சுமார் 1.85 கோடி தரவுகள் நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அது முந்தைய ஆறு மாதங்களுடன் ஒப்பிடும் போது 13 சதவிகிதம் வரை அதிகம் ஆகும். ஆபாச தரவுகளை கண்டறியும் வழிமுறை மாற்றப்பட்டதே இதற்கு காரணம் ஆகும்.

இத்துடன் மற்றவரை துன்புறுத்தும் வகையில் பதிவிடப்பட்ட சுமார் 1.14 கோடி தரவுகள் நீக்கப்பட்டிருக்கிறது. பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் பகிரப்படும் தரவுகளை நீக்கும் பணிகளில் ஃபேஸ்புக் தொடர்ந்து மும்முரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளது.