48 எம்.பி. நான்கு கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை ப்ளிப்கார்ட் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

இதுதவிர புதிய ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி சென்சார் மற்றும் நான்கு கேமராக்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் கைரேகை சென்சாரும் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியான டீசரின்படி புதிய ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் டெலிபோட்டோ கேமரா வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

இந்தியாவில் நவம்பர் 20 ஆம் தேதி ரியல்மி எக்ஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகிறது.

முன்னதாக வெளியான தகவல்களின் படி ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் RMX1925 எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.