விரைவில் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட் டி.வி.

நோக்கியா மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் புதிதாக ஸ்மார்ட் டி.வி. மாடல்களை வெளியிட புதிய ஒப்பந்தம் போட்டுள்ளன. புதிய அறிவிப்பின் படி நோக்கியா ஸ்மார்ட் டி.வி. மாடல்களை ஃப்ளிப்கார்ட் விற்பனை செய்யும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் ஜெ.பி.எல். ஆடியோ வழங்கப்படும் என தெரிகிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட் டி.வி.க்கள் இந்திய சந்தையில் ஒன்பிளஸ், சியோமி, மோட்டோரோலா போன்ற பிராண்டுகளுக்கு போட்டியாக இருக்கும்.

உள்நாட்டில் நோக்கியா ஸ்மார்ட் டி.வி.க்களை உற்பத்தி செய்து அவற்றை விற்பனை செய்யும் பணிகளை ஃப்ளிப்கார்ட் கவனித்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நோக்கியா பெயரில் ஸ்மார்ட் டி.வி.க்களை விற்பனை செய்வதற்கான உரிமத்தை ஃப்ளிப்கார்ட் பெற்றிருக்கிறது.

நோக்கியா மற்றும் ஃப்ளிப்கார்ட் ஒப்பந்தத்தின் கீழ் உருவாகும் ஸ்மார்ட் டி.வி.க்கள் பற்றிய இதர விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதேபோன்று ஸ்மார்ட் டி.வி.யின் திரை அளவு, டிஸ்ப்ளே வகை, செயலிகள், விலை போன்ற விவரங்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் மோட்டோரோலா டி.வி.க்களை விற்பனை செய்வதற்கும் ஃப்ளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இடையே இதேபோன்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இருநிறுவனங்கள் ஒப்பந்தத்தின் படி மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் டி.வி ஃப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 1,19,999 விலையில் வெளியிடப்பட்டது.