இந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்

இந்தியாவில் விவோ நிறுவனத்தின் இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது. விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி, 6 ரேம் + 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ரேம் + 128 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை குறைப்புக்கு பின் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி வேரியண்ட் ரூ. 13,990 விலையிலும், 6 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மாடல் ரூ. 14,990 விலைக்கும், 6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 15,990 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றில் 4 ஜி.பி. ரேம் மாடலின் விலை ரூ. 1000 என்றும் 6 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது.

Vivo-Z1-Pro-Pic

விவோ இசட்1 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 எல்.சி.டி. ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 712 10 என்.எமம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி (UFS 2.1)
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி (UFS 2.1)
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஃபன்டச் ஒ.எஸ். 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78, சோனி IMX499 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. 120° வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
– 2 எம்.பி. கேமரா, f/2.4
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
– 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ இசட் 1 ப்ரோ ஸ்மார்ட்போன் சோனிக் புளு, சோனிக் பிளாக் மற்றும் மிரர் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.