ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு ரூ. 50 தள்ளுபடி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளுக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்குகிறது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

அதன்படி ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 444 மற்றும் ரூ. 555 பிரீபெயிட் சலுகைகளை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இரு சலுகைகளும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் அமலாக்கப்பட்டதும் அறிவிக்கப்பட்டன.

கட்டண உயர்வை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து இரு சலுகைகளுக்கும் முறையே ரூ. 40 மற்றும் ரூ. 50 தள்ளுபடி வழங்குகிறது. தள்ளுபடி சலுகை பேடிஎம் மூலம் பணம் செலுத்துவோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இரு சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்து மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்.

ஜியோவில் ரூ. 444 சலுகையை தேர்வு செய்த வாடிக்கையாளர்கள் SHUBHP44 எனும் ப்ரோமோ கோட் பதிவிட வேண்டும். ரூ. 555 சலுகையை தேர்வு செய்தவர்கள் SHUBHP50 எனும் ப்ரோமோ கோட் பதிவிட வேண்டும். ப்ரோமோ கோட்களை பதிவிட்டதும் இரு சலுகைகளுக்கும் முறையே ரூ. 40 மற்றும் ரூ. 50 தள்ளுபடி பெற முடியும்.

இந்த தள்ளுபடி ஒரு பேடிஎம் அக்கவுண்ட்டிற்கு ஒருமுறை மட்டுமே பொருந்தும். அந்தவகையில் அடுத்தடுத்த ரீசார்ஜ்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தாது. ரூ. 444 சலுகைக்கு ப்ரோமோ கோட் பயன்படுத்தினால், ரூ. 555 சலுகைக்கு ப்ரோமோ கோட் பயன்படுத்த முடியாது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 444 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு 1000 நிமிடங்கள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 555 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு 3000 நிமிடங்கள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.