6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ. 599 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு 6 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இச்சலுகையில் பயனர்களுக்கு மாதம் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் நேரலை டி.வி., திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை வோடபோன் பிளே செயலி மூலம் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

இந்த சலுகை ஏர்டெல் ஏற்கனவே வழங்கி வரும் ரூ. 597 பிரீபெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ. 597 சலுகையில் பயனர்களுக்கு 6 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 168 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு சேவையும், ஏர்டெல் டி.வி. சந்தாவும் வழங்கப்படுகிறது.

சமீபத்தில் வோடபோன் நிறுவனம் தனது ரூ. 129 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்தது. அதில் பயனர்களுக்கு இலவச வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 2 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் பயனர்களுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

வோடபோனின் ரூ. 129 சலுகை ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 129 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ. 129 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 2 ஜி.பி. டேட்டா, அனிலிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 1 ஜி.பி. டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது.