பட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹாட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 என அழைக்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை இதுவரை இல்லாத வகையில் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என இன்ஃபினிக்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியான விவரங்களில் புதிய ஸ்மார்ட்போனில் மொத்தம் நான்கு கேமராக்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் நாட்ச் டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

நான்கு கேமராக்களுடன் ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும், பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே வெளியான இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.19 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் சென்சார் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.