ரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே

ஹேத்வே நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு லைஃப்லாங் பிங் எனும் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு அனிலிமிட்டெட் இணைய சேவையை மாதம் ரூ. 399 கட்டணத்தில் வழங்குகிறது. புதிய சலுகையில் பயனர்களுக்கு 50Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

இத்துடன் பயனர்கள் திரும்பப் பெறக்கூடிய கட்டணமாக ரூ. 1,999 ஒருமுறை செலுத்த வேண்டும். முன்னதாக ஹேத்வே தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 449 விலையில் இணைய வசதியை வழங்கும் சலுகையை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. எனினும், இச்சலுகை ரூ. 100 தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டது.

லைஃப்லாங் பிங் சலுகை முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் பிரவுசிங் அனுபவம் 50Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. புதிய சலுகை மற்ற பகுதிகளில் வழங்குவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.