ரூ. 5,799 விலையில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, ஏ.ஐ. அம்சங்கள், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பாலிகார்பனைட் பாடி கொண்டிருக்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் P2i நானோ கோட்டிங் கொண்ட ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படுகிறது. இதுதவிர வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளன.

சியோமி ரெட்மி 7ஏ சிறப்பம்சங்கள்

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்

– அட்ரினோ 505 GPU

– 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி

– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10

– டூயல் சிம் ஸ்லாட்

– 12 எம்.பி. பிரைமரி கேமரா சோனி IMX456 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, f/2.2

– 5 எம்.பி. செல்ஃபி கேமரா

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ

– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i நானோ கோட்டிங்)

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சியோமி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மேட் புளு, மேட் கோல்டு மற்றும் மேட் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. மாடல் விலை ரூ. 5999 என்றும், 3 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 6,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஜூலை வரை ரெட்மி 7ஏ விலை முறையே ரூ. 5,799 மற்றும் ரூ. 5,999 விலையில் கிடைக்கும். இதன் விற்பனை ஜூலை 11 ஆம் தேதி Mi ஹோம் ஸ்டோர், Mi அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்ளில் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் இரண்டு வருட வாரண்டியுடன் வழங்கப்படுகிறது.