இந்தியாவில் ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் எடிஷன் அறிமுகம்

ரியல்மி பிராண்டு தனது ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஸ்பைடர் மேன் ஸ்பெஷல் எடிஷனில் பிரத்யேக பாதுகாப்பு கேஸ் மற்றும் கலர் ஒ.எஸ். 6 ஸ்பைடர் மேன் தீம் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இத்துடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட வால்பேப்பர், போன் கேஸ் மற்றும் சார்ஜர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை வரும் வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.

ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்றே தெரிகிறது. அந்த வகையில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். 6 வழங்கப்படுகிறது.

இத்துடன் ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், முன்புறம் 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. பின்புறும் கிரேடியண்ட் பேக், எஸ் வடிவ வளைவு மற்றும் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.