விரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா யூனிட் கொண்ட நோக்கியா 9 பியூர்வியூ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

ஐந்து கேமரா யூனிட்டில் இரண்டு RGB மற்றும் மூன்று மோனோக்ரோம் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது ஒற்றை நிற சென்சார் சேகரிப்பதை விட பத்து மடங்கு அதிக வெளிச்சத்தை சேகரிக்கும். இது மல்டி-சென்சாபர் கேமரா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் ஐந்து கேமராக்களும் இயங்கு ஹெச்.டி.ஆர். தர புகைப்படங்களை வழங்குகிறது.

ஒரு லென்ஸ் 12 எம்.பி. தரத்திலான புகைப்படங்களை வழங்குகிறது. பர்ஸ்ட் மோட் ஆன் செய்யப்பட்ட நிலையில், இவை மொத்தம் 60 எம்.பி. தர புகைப்படங்களை வழங்கும்.

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். 10 வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2560×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்

– அட்ரினோ 630 GPU

– 6 ஜி.பி. ரேம்

– 128 ஜி.பி. மெமரி

– ஆண்ட்ராய்டு 9.0 பை

– 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்

– 20 எம்.பி. செல்ஃபி கேமரா

– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– ஃபாஸ்ட் சார்ஜிங்

– வயர்லெஸ் சார்ஜிங்