ரூ. 14,990 விலையில் 32 எம்.பி. இன்-டிஸ்ப்ளே கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இத்துடன் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ்., 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் 4D கேமிங் அனுபவம் சேர்க்கப்பட்டுள்ளது.

இது கேமின் போக்கிற்கு ஏற்ப அதனை அதிரச் செய்யும். பிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியண்ட் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விவோ இசட்1 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 எல்.சி.டி. ஸ்கிரீன்

– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 712 10 என்.எம். பிராசஸர்

– அட்ரினோ 616 GPU

– 4 ஜி.பி. / 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி (UFS 2.1)

– 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. மெமரி (UFS 2.1)

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– டூயல் சிம் ஸ்லாட்

– ஃபன்டச் ஒ.எஸ். 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை

– 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78, சோனி IMX499 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்

– 8 எம்.பி. 120° வைடு ஆங்கிள் கேமரா, f/2.2

– 2 எம்.பி. கேமரா, f/2.4

– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

– கைரேகை சென்சார்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.

– 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி

– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் சோனிக் புளு, சோனிக் பிளாக் மற்றும் மிரர் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,990 என்றும் டாப் எண்ட் மாடலான 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் விவோ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ஜூலை 11 ஆம் தேதி துவங்குகிறது.