ரியல்மி எக்ஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷனும் இந்தியாவில் அறிமுகமாகிறது.

சீனாவில் கடந்த வாரம் அறிமுகமான ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் எடிஷனில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிவப்பு நிற கஸ்டம் கேஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என ரியல்மி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

ரியல்மி எக்ஸ் சிறப்பம்சங்கள்

– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்