இந்தியாவில் ஹானர் ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைப்பு

ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 8சி ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸருடன் அறிமுகமான ஹானர் 8சி 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் ரூ. 11,999 விலையில் அறிமுகமான ஹானர் 8சி விலை கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட நிலையில், இதன் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹானர் 8சி ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 8சி 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹானர் 8சி மாடலில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூடிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.