பிராட்பேண்ட் பயனர்களுக்கு 5 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இச்சலுகை ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.

புதிய சலுகை ஏற்கனவே பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இச்சலுகையில் பி.எஸ்.என்.எல். 10Mbps வேகத்தில் 5 ஜி.பி. டேட்டாவினை வழங்குகிறது. இலவச டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் 1 Mbps ஆக குறைக்கப்படுகிறது.

இதுதவிர ஜூலை 31 ஆம் தேதி வரை வருடாந்திர பிராட்பேண்ட் சலுகைகளை தேர்வு செய்வோருக்கு 25 சதிவிகித கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் சலுகை பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் பாரத்ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகையை பயனர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் கட்டணங்களில் கழித்துக் கொள்ளலாம்.

மேலும் பி.எஸ்.என்.எல். பயனர்கள் மாதத்திற்கு ஒருமுறை சலுகையை மாற்றிக் கொள்ளும் கோரிக்கையை விடுக்கலாம். ஏற்கனவே கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் பட்சத்தில், மற்றொரு கோரிக்கையை விடுக்க முடியாது. கேஷ்பேக் சலுகையை பெற பயனர்கள் கீழே வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

– பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் இணைப்பில் லாக்-இன் செய்ய வேண்டும்.

– சலுகையில் சேர்வதற்கு சந்தாதாரர் ஆக விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

– விருப்பம் தெரிவித்ததும், புதிய விண்டோ திறக்கும்.

– இங்கு சர்வீஸ் ஐ.டி. மற்றும் CAPTCHA பதிவிட வேண்டும்.

– இனி நீங்கள் பதிவு செய்திருக்கும் மொபைல் நம்பருக்கு வரும் ஒ.டி.பி.-யை பதிவிட வேண்டும்.

– அடுத்து உங்களது திட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.

– 25% கேஷ்பேக் சலுகையை பெற சமர்பிக்கக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

– கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதை உறுதி செய்ய குறுந்தகவல் வரும்.