ரூ. 23,999 விலையில் 49 இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

சீன மின்னணு உற்பத்தியாளரான ஷின்கோ இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. SO50AS-E50 என அழைக்கப்படுகிறது. 49-இன்ச் அளவில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் மற்றும் பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஷின்கோ 49-இன்ச் SO50AS-E50 ஸ்மார்ட் டி.வி. விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ஸ்மார்ட் டி.வி.யில் ஏ பிளஸ் கிரேடு டிஸ்ப்ளே பேனல் FHD 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட் டி.வி. குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ-53 பிராசஸர், மாலி 450 GPU கொண்டிருக்கிறது. இதனால் காட்சிகளை பார்க்கும் போது கிராஃபிக்ஸ் அனுபவம் சிறப்பாக இருக்கும். இத்துடன் 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட் மற்றும் வைபை வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4K தரவுகளை இயக்க பாக்ஸ் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.