இந்தியாவில் சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம்10 விலை அமேசான் தளத்தில் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என இருவித மாடல்களில் கிடைக்கும் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் ரூ. 8,190 மற்றும் ரூ. 9,290 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

தற்சமயம் இவற்றின் விலையில் முறையே ரூ. 1,200 மற்றும் ரூ. 1,300 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசானில் மாற்றப்பட்டு விட்டது. இதனால் பயனர்கள் கேலக்ஸி எம்10 (2 ஜி.பி.) வேரியண்ட்டை ரூ. 6,990 விலையிலும், 3 ஜி.பி. ரேம் வேரியண்ட்டை ரூ. 7,990 விலையிலும் வாங்கிட முடியும்.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 1.6 ஜிகாஹெர்ட்ஸ் எக்சைனோஸ் 7870 ஆக்டா-கோர் பிராசஸர், சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5 யு.எக்ஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளம் வழங்கப்பட்டிருக்கிறது.

டூயல் நானோ சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 5 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவும், முன்புறம் 5 எம்.பி. f/2.0 அப்ரேச்சர், இன்-டிஸ்ப்ளே ஃபிளாஷ் வசதி கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 13 எம்.பி. பிரைமரி கேமராவுடன் f/1.9 அப்ரேச்சர் மற்றும் லைவ் ஃபோக்கஸ் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.