விரைவில் இந்தியா வரும் ரெட்மி 7ஏ – புதிய டீசர் வெளியீடு

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சியோமி புதிய டீசரை வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தையில் ரூ. 5000 முதல் ரூ. 7000 பிரிவு விற்பனையில் ரெட்மி 5ஏ மற்றும் ரெட்மி 6ஏ மட்டும் 48 சதவிகிதம் இருப்பதாக சியோமி இந்தியா தெரிவித்துள்ளது. இத்தகவலுடன் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனிற்கான நேரம் வந்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்திய சந்தையில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனிற்கு பிரத்யேக அம்சம் ஒன்றை வழங்க இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. புதிய அம்சம் ரெட்மி நோட் 7 மற்றும் Mi ஏ2 மாடல்களில் அதிகம் விரும்பப்பட்டது என்றும் இது மற்ற நிறுவனங்கள் ரூ. 20,000 பட்ஜெட்டில் இதுவரை வழங்கியதே இல்லை என்றும் சியோமி தெரிவித்துள்ளது.

சீனாவில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் 720×1440 பிக்சல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜி.பி. ரேம் + 16 ஜி.பி. மெமரி, 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி என மூன்று மாடல்களில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. அம்சங்கள், PDAF ஃபாஸ்ட் ஃபோகஸ், ஏ.ஐ. பியூட்டி மற்றும் ஏ.ஐ. பேக்கிரவுண்ட் பிளர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் 10 வாட் சார்ஜிங் வசதியும், டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2,. ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது.