இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் புகைப்படங்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஹேண்ட்ஸ் ஆன் (Hands On) புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய புகைப்படங்களில் சாம்சங் நோட் ஸ்மார்ட்போனில் AMOLED பேனல் கொண்ட ஹோல் பன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

கேலக்ஸி நோட் 10 பிளஸ் புகைப்படங்களில் ஸ்மார்ட்போனின் பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட கேமரா யூனிட் காணப்படுகிறது. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ், டைம் ஆஃப் ஃபிளைட் (ToF) சென்சார் வழங்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி நோட் 10 பிளஸ் அறிமுகமாகும் என தெரிகிறது. புகைப்படங்களுடன் கேலக்ஸி நோட் 10 பிளஸ் வீடியோ ஒன்றும் யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது. புகைப்படங்களின் படி கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் ஹோல்-பன்ச் டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா நடுவே பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் பூட் ஸ்கிரீன் புகைப்படத்தில் அதன் பெயர் விவரங்கள் வெளியாகியுள்ளது. கேலக்ஸி நோட் 10 ப்ரோவிற்கு பதில் கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடல் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

Source: TechTalkTV