பப்ஜி லைட் பீட்டா இந்திய வெளீயீட்டு தேதி

பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் கணினிகளுக்கான பப்ஜி லைட் பீட்டா இந்தியாவில் ஜூலை 4 ஆம் தேதி துவங்கும் என தெரிவித்துள்ளது. ஜூலை 4 ஆம் தேதி இந்தியா மட்டுமின்றி ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலும் பப்ஜி லைட் பீட்டா வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பப்ஜி லைட் பீட்டா இந்தி மொழியிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட்டா சேவை வெளியீடு தொடர்பான அறிவிப்பை பப்ஜி லைட் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. பப்ஜி லைட் சேவைக்கான முன்பதிவு ஜூன் 20 ஆம் தேதி துவங்கி ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முன்பதிவு நிறைவுற்றதும், பப்ஜி பீட்டா பதிப்பு இந்தியாவில் கிடைக்கும். முன்பதிவு செய்வோருக்கு பரிசு குறியீடு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது. பரிசு குறியீடு அடங்கிய மின்னஞ்சல் ஜூலை 11 ஆம் தேதி அனுப்பப்படும். இதனை பயன்படுத்தி பயனர்கள் M416 அசால்ட் ரைஃபிளில் டைகர் ஸ்கின், பாராஷூட்டிற்கு சீட்டா ஸ்கின் வாங்கிக் கொள்ளலாம்.

இத்துடன் முன்பதிவு எண்ணிக்கை 100,000-ஐ கடந்ததும் பப்ஜி பிளாக் ஸ்கார்ஃப், பன்க் கிளாசஸ், பிளடி காம்பேட் பேண்ட் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இதேபோன்று 200,000 முன்பதிவுகளை கடந்ததும் பயனர்களுக்கு கோல்டு பப்ஜி ஸ்கார்ஃப், ஸ்டிரைப்டு லாங்-ஸ்லீவ் ஷர்ட், ரெட் ஸ்போர்ட்ஸ் டாப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.