இந்தியாவில் ரூ. 3,000 விலை குறைக்கப்பட்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்

ஹூவாய் நிறுவனம் தனது ஹூவாய் வை9 2019 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் வெளியாகி ரூ. 15,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஹூவாய் தனது வை9 2019 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ. 3000 குறைப்பதாக அறிவித்துள்ளது. ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போன் ரூ. 3000 குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போனினை ரூ. 12,990 விலையில் வாங்கிட முடியும்.

ஹூவாய் வை9 2019 புதிய விலை அமேசான் வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. இந்த விலை குறைப்பு எத்தனை நாட்கள் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2 இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முன்புறம் 13 எம்.பி. + 2 எம்.பி. செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா சென்சார்களுடன் ஏ.ஐ. சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.